மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்

By T Yuwaraj

15 Jan, 2021 | 03:38 PM
image

மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியின் பிரவுன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காட்மோர் கல்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ரகுநாதன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியாவிலிருந்து காட்மோர் நோக்கிச்  பயணித்த தனியார் பஸ் ஒன்றுக்கு, காட்மோர் பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த நபர் பிரவுன்ஸ்விக் பகுதியில் வைத்து இடம் கொடுக்க முற்படுகையில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து படுகாயமடைந்த குறித்த இளைஞரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞரின் சடலம்  மஸ்கெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33