ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலக தடகள ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தடகள ஒருமைப்பாட்டு பிரிவு (AIU) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

29 வயதான அமெரிக்க வீராங்கனையான மெக்னீல், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலக சாம்பியனாகவும் இருந்தார்.

மெக்னீல் மீதான குற்றச்சாட்டுகளானது நிரூபிக்கப்பட்டால் அவர் எட்டு ஆண்டுகள் தடையத்தரவினை எதிர்கொள்ள நேரிடும்.