மீகொடயிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 55 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை 26 ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஏழு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்பின்பு , மீதமுள்ள ஊழியர்களும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. 

இந்நிலையில், தொற்றுக்குள்ளான ஊழியர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, தொற்றாளர்களுடன்  நெருங்கிய வட்டாரத்திலுள்ளவர்களை தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.