வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் நாளை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப் பகுதியில் நீர்வெட்டானது அமுல்படுத்தப்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வவுனியா நகரம், குருமன்காடு, சூசைப்பிள்ளையார் வீதி மற்றும் வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோக நடவடிக்கையே இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளதாக வவுனியா நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

வவுனியா நகரை அண்டி பகுதிகளில் நீர் இணைப்புக் குழாய்களில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.