நாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும்  கொரோனா தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், பாராளுமன்றக் கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்படி பி.சி.ஆர். பரிசோதனைகள் இன்று காலை 9.00 மணிமுதல் நண்பகல் வரை முன்னெடுக்கப்படும்.

இதுவரை அமைச்சர் வாசுதேவ நாணக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.