இத்தாலிய விமான நிலையத்தில் தரையிறங்கிய டி.எச்.எல். சரக்கு விமானமொன்று ஓடுபாதையை தாண்டிச் சென்று சனச்தடி வீதியில் பிரவேசித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து பயணத்தை மேற்கொண்ட ஏ.எஸ்.எல். எயார்லைன்ஸ் போயிங் 737 - 400 விமானம் ஒரியோ அல் செரியோ விமான நிலையத்தின் ஒடுபாதையை தாண்டி எல்லை வேலியை உடைத்துக் கொண்டு வீதியில் பிரவேசித்துள்ளது. அந்த விமானம் டி.எச்.எல். நிறுவனத்தால் தனியார் விரைவு தபால் சேவைக்காக (கூரியர் சேவை) பயன்படுத்தப்பட்டு வந்த விமானமாகும். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அவசரசேவைப் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.