கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி - களுதாவாளை வீதி பிள்ளையார் ஆலயத்தடியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துச் சம்பவத்தில் இரண்டு கடைகள் சேதமடைந்ததுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மேற்படி விபத்துச் சம்பவமானது களுதாவளை பிரதான வீதியில் அமையப் பெற்றுள்ள வீதிப்பிள்ளையார் ஆலயத்தினை அண்மித்ததாக அமைந்துள்ள கடையை உடைத்துக் கொண்டே இடம்பெற்றுள்ளது.

மேற்படி விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் நடையில் சென்று கொண்டிருந்த நபருடன் மோதி வேகம் தணியாத நிலையில் கடையை உடைத்துக் கொண்டு உரிமையாளருடன் மோதியதில் இவ் இபத்து இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.

மேற்படி விபத்து சம்பவத்தில் இரண்டு கடைகள் சேதமடைந்ததுடன். மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவர் உட்பட வீதியில் பயணித்த ஒருவரும் கடை உரிமையாளர் ஒருவர் அடங்கலாக மொத்தமாக நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் சகளுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.