ரியோ ஒலிம்பிக் ; கூகுள் டூடுலில் மாற்றம்

Published By: Raam

05 Aug, 2016 | 06:19 PM
image

பிரேஸில் நாட்டில் ரியோ நகரில் இன்று தொடங்க உள்ள 31 ஆவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் சுவாரஸ்யமான டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டி இலங்கை நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகின்றன. இந்தப் போட்டியில் இலங்கை,இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 207 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில், கொசோவா, தெற்கு சூடான் போன்ற நாடுகள் முதல்முறையாக பங்கேற்கின்றது. 

ரியோ ஒலிம்பிக் விளையாட்டை முன்னிட்டு, '2016 டூடுல் பழ விளையாட்டு போட்டி' ஒன்றை கூகுள் டூடுலில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டி வருகிற 21ஆம் திகதி வரை நடைபெற உள்ள நிலையில், வரும் நாட்களில் பழக்கூடையில் உள்ள அன்னாச்சிப்பழம், ஸ்டோபெரி, தர்பூசணி ஆகிய பழங்கள் ரியோ போட்டியில் பங்கேற்று, தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் டூடுள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ரியோ ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறும் ஓட்டப்பந்தயம், நீச்சல் போட்டி, சைக்கிள் போட்டி உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளை பிரதிபலிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த பழ விளையாட்டில் பங்கேற்க விரும்பவர்கள் அன்ட்¬ரோயிட் மற்றும் ஐஓஎஸ் கையடக்கத்தொலைபேசிகளில், கூகுள் டூடுலை கிளிக் செய்து விளையாடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07