(செ.தேன்மொழி)
அம்பாந்தோட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக தயாராக்கப்பட்டிருந்த 4 கஜ முத்துக்களுடன் பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அம்பாந்தோட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 4 கஜ முத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்தாக பெண்ணொருவர் உட்பட ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெல்லவாய , கொஸ்லந்த , எதிலிவௌ மற்றும் மொணராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளின் பொது தெரியவந்துள்ளது.
கஜமுத்துக்கள் நான்கும் தரமானதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை தற்போது வனிஜீவ ராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM