வவுனியாவில் கடும் மழையால் போக்குவரத்து பாதிப்பு : மக்கள் அவதி

Published By: Digital Desk 4

14 Jan, 2021 | 04:10 PM
image

நாட்டில் தொடர்சியாக பெய்துவரும்  கடும் மழையின் காரணமாக  வவுனியா மாவட்டத்தில் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன்  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக வவுனியா சின்னத்தம்பனை கிராமத்திலிருந்து மடுத்தேவாலயத்திற்கு செல்லும் பிரதானவீதியின் பாலம்  முற்றாக சேதமடைந்துள்ளது.

பாலம் பாதிப்படைந்துள்ள நிலையில், இவ்வீதியை பயன்படுத்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியுள்ளனர். 

குறித்த வீதி  இரணை இலுப்பைக்குளம், செங்கல்படை, வேலங்குளம், மடுக்குளம் சின்னத்தம்பனை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மடு பிரதேச செயலகத்திற்கு செல்லும்பிரதான வீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

தற்போது பாலம் சேதமடைந்தமையால்  மன்னார் பிரதான வீதிக்கு செல்வதானால்  பத்து கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மக்களின் நன்மை கருதி குறித்த பாலத்தை உடனடியாக  திருத்தித்தருமாறு உரிய அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04