இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 237 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஒட்டங்களை நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய ஆட்டநேர முடிவின்போது  இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது.

இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 64 ஒட்டங்களையும் அணித்தலைவர் மெத்தியுஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மிச்சல் ஸ்டார்க் 50 ஒட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.