காத்தான்குடி பிரதேசம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் -மட்டு. அரச அதிபர் 

14 Jan, 2021 | 01:43 PM
image

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு காத்தான்குடி  பிரதேசத்தில் தொடர்ந்தும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை  தனிமைப்படுத்தல் நீடிக்கப்படும் என இன்று வியாழக்கிழமை (14) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரசேத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து கடந்த டிசம்பர் 31 ஆம் தொடக்கம் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு நாளை 15 ம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது எழுமாறாக மேற்கொள்ளப்பட்டுவரும் அன்டிஜன் மற்றும் பிசி ஆர் பரிசோதனை பல இடங்களில் மேற்கொள்ள வேண்டிய தேவை காணப்படும்  காரணமாக குறித்த பரிசோதனைகள் நிறைவு செய்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட முடக்கம் விலக்கிக் கொள்ளப்படும் என மாவட்ட செயலணி குழு தெளிவுபடுத்தியுள்ளது.  

எனவே எதிர்வரும் திங்கட்கிழமை (18) திகதி வரை 3 தினங்களுக்கு தொடர்ந்தும் முடக்கம் நீடிக்கப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிய காரணத்தால் தொற்று பரவும் நிலை குறைந்து முன்னேற்றம் கண்டிருக்கின்றது. எனவே மேற்குறித்த கால எல்லைவரைக்கும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி  சுகாதார வழிமுறைகளை பேணுமாறு அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46