கொரோனா நிலைமையிலும் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தைப்பொங்கல் 

14 Jan, 2021 | 02:57 PM
image

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் இன்று உலகலாவிய ரீதியில் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

கொரோனா தொற்றுப் பரவலிலும் இன்றையதினம் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து நாடளாவிய ரீதியில் பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம்

தமிழர் திருநாளாம் தைத்திருநாளை யாழ். மக்கள் இன்றையதினம் கொண்டாடி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தெற்று அச்சம் காரனமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொங்கல் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

மலையகம்

மலையக மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை  இன்று ( 14.01.2021) வியாழக்கிழமை மிக எளிய முறையில் கொண்டாடினார்கள்.

 அட்டன் பகுதியில் அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்ம ஸ்ரீ பூர்ணசந்திராணந்த குருக்கள் தலைமையில் தைபொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். 

அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை

தைப் பொங்கள் தினமான இன்று (14) திருகோணமலையிலும் அமைதியாக தைத்திருநாள் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 

காலை வேலையில் பொங்கல் தினத்தில் கோயிலுக்கு சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டார்கள். 

சுகாதார நடை முறைகளை பின்பற்றி திருகோணமலை காளி கோயிலிலும் இவ்வாறு வழிபாட்டில் தமிழ் மக்கள்  ஈடுபட்டார்கள். 

திருகோணமலையில், மக்களின் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. கொவிட்19 காரணமாக இம் முறை தைப்பொங்கல் கொண்டாட்டம் வெகு விமர்சையாக இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலருக்கு உட்பட்ட பல கிராமங்கள் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் காணிகள்  நீரில் மூழ்கி காணப்படுகின்ற நிலையில் பலர் தைப்பொங்கல்  அனுஷ்டிக்காது உள்ளனர்.

இந்நிலையில் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புலோப்பளை மேற்கு சிந்தாத்திரை மாதா தேவாலயத்தை சூழ வெள்ள நீர் உட்புகுந்துள்ள நிலையிலும் நீரின் மேல் கற்கள் அடுக்கி தகரங்களை வைத்து இளைஞர்கள்  பொங்கல் பொங்கி நன்றிதெரிவித்தனர்.

மட்டக்களப்பு

கொரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் சுகாதார நடைமுறைகளைப்பேணி  தைப்பொங்கல்  பண்டிகையை கிழக்கு மாகாண இந்து மக்கள் மிகவும் அமைதியாகக் கொண்டாடி வருகின்றனர். 

பல இந்து ஆலயங்களில் தைப்பொங்கல் நான் காலை  முதல் விசேட தைப்பொங்கல பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலயங்களில் சுகாதார விதிமுறைகளின்படி குறிப்பிட்ட அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

முகக்கவசம் அணிந்துகைகளைக் கழுவி சமுக இடைவெளிகளைப்பேணி பக்தார்கள் பொங்கல் பூசை வழிபாடுகளில் பங்கேற்றதை அவதானிக்க முடிந்தது.

பிரதான பூசை வழிபாடுகள் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தில் பிரதம பூசகர் பிரபாகரன குருக்கள் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.

 கடைகள் வீடுகள் பாடசாலைகளிலும் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு 

தமிழர் திருநாள் தைப்பொங்கல் நிகழ்வுகள் இன்றையதினம் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளிலும் தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தினர் .

மக்களின் வீடுகள் ,வியாபார இஸ்தாபனங்கள்  ,தொழில் நிலையங்கள் ஆலயங்களில் பானைகளில்  பாலிட்டு பொங்கல் பொங்கி தைப்பொங்கல்கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொவிட் -19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் அடை மழைக்கு மத்தியிலும் மக்கள் தமிழர் திருநாளை கொண்டாடினர்.

மன்னார்

தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை வரலாற்று சிறப்புமிக்க  மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.

ஆலய பிரதம குரு கருனாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் பொங்கி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகாதார வழிமுறைகளுடன் இம் முறை ஆலயத்தில் தைப்பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

மேலும் மன்னாரில் உள்ள இந்து, கத்தோலிக்க ஆலயங்களிலும் பொங்கல் பொங்கி விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் அமைதியான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55