சர்வதேச விளையாட்டு அரங்கில் உயரியதும் உன்னதம்வாய்ந்த விளையாட்டு விழாவான 31 ஆவது ஒலிம்பிக் போட்டி இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணிக்கு (பிரேஸில் நேரப்படி இன்றிரவு 8 மணி) தொடங்குகிறது.

தொடக்க விழாவில் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் எப்போதுமே தீபம் ஏற்றுபவர் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்படும். ஆனால் இந்த முறை பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது வெளியே கசிந்ததுள்ளது.

எனது பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருப்பதால் அந்த நிறுவனத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே என்னால் தீபத்தினை ஏற்ற முடியும் என பீலே தெரிவித்திருந்தார். எனினும் அந்த நிறுவனத்திடம் அனுமதி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிகிறது. இதனால் பீலே நிச்சயம் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.