இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இப் போட்டியிலிருந்த விலகியுள்ளார்.

பயிற்சியின்போது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இந்த ஆட்டத்தில் விலகியுள்ள வேளையில், அணித் தலைமை பொறுப்பு தினேஷ் சந்திமாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப் போட்டியானது இன்று காலை 10:00 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.


Sri Lanka Playing Squad:

Lahiru Thirimanne, Kusal Perera, Kusal Mendis, Dinesh Chandimal (c), Angelo Mathews, Niroshan Dickwella (wk), Dasun Shanaka, Wanindu Hasaranga, Dilruwan Perera, Lasith Embuldeniya, Asitha Fernando

England Playing Squa:

Zak Crawley, Dominic Sibley, Jonny Bairstow, Joe Root (c), Daniel Lawrence, Jos Buttler (wk), Sam Curran, Dominic Bess, Jack Leach, Mark Wood, Stuart Broad