உலகின் மிகப் பழமையான குகை ஓவியத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேஷிய குகையொன்றில் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் அமைந்துள்ள குகையொன்றினுள்ளே 45,500 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பன்றியின் உருவமொன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது உலகில் எங்கும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒரு உயிரினத்தின் பழமையான வரை படத்தை இந்த பன்றியின் உருவம் பிரதிபளிப்பதாக அமைந்துள்ளதாக  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஓவியமானது சுலவேசி தீவின் தொலைதூர பள்ளத்தாக்கிலுள்ள லியாங் டெடோங்ங்கே என்ற குகையில் காணப்பட்டதுடன், இது பிராந்தியத்தின் மனித குடியேற்றத்தின் ஆரம்ப சான்றுகளை வழங்கியுள்ளது.

ஓவியத்தை வரைந்தவர்கள் முற்றிலும் நவீனமானவர்கள், அவர்கள் எங்களைப் போலவே இருந்தார்கள், அவர்கள் விரும்பும் எந்தவொரு ஓவியத்தையும் வரைவதற்கான திறனும் கருவிகளையும் கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.