ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு வழக்கம்போல் இந்த முறையும் அமெரிக்கா, சீனா இடையே தான் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ரஷ்ய 271 பேருடன் இம்முறை களமிறங்கவுள்ளது.

அமெரிக்கா 554 பேரை களமிறக்கியுள்ளது. இதில் 292 பேர் வீராங்கனைகள். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் அதிக வீராங்கனைகளை களமிறக்கிய அணி என்ற பெருமை அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளது. சீனா 413 பேரையும், பிரித்தானியா 366 பேரையும், போட்டியை நடத்தும் பிரேசில் 465 பேரையும் களமிறக்கியுள்ளன.இம்முறை இலங்கை சார்பாக 9 பேர் 10 போட்டிகளில் களமிறங்கியுள்ளனர்.