(எம்.எப்.எம்.பஸீர்)
சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவை பிணையில் விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்த மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ மற்றும் தேவிகா அபேரத்ன ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் மூவர் கொண்ட விஷேட நீதிமன்றில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கொழும்பு மேலதிக நீதவானால் மேஜர் அஜித் பிரசன்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய நீதிவானின் விஷேட உத்தரவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரைக் கைது செய்து ஆஜர் படுத்திய நிலையிலேயே அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் மேலதிக நீதவான் நீதிமன்றம் விதித்த விளக்கமறியல் உத்தரவிற்கு எதிராக அஜித் பிரசன்ன தாக்கல் செய்த மேன்முறையீட்டை தேவிகா அபேரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் பரிசீலித்து வந்தது.
இதன்போது மேஜர் அஜித் பிரசன்ன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரனி சவேந்ர பெர்ணான்டோ மன்றில் ஆஜரான நிலையில், இதன் பின்னர் வழக்கு தொடுநருக்கோ சாட்சியாளர்களுக்கோ இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவதில்லையென சந்தேகநபரான ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன சத்தியக் கடதாசி மூலம் நீதிமன்றத்திற்கு உறுதியளிப்பதாக கூறி, அந்த சத்தியக் கடதாசியைக் கையளித்தார்.
அத்துடன், அஜித் பிரசன்னவின் உடல் நிலை உள்ளிட்டவற்றை மையப்படுத்தி அவருக்கு பிணையளிக்குமாரும் கோரினார்.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி ஜனக பண்டார மன்றில் ஆஜரான நிலையில், , குறித்த உறுதிப்பாட்டுக்கு அமைவாக பிணை வழங்க எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை. இந் நிலையிலேயே, நீதிபதிகள் குழாம், அஜித் பிரசன்னவுக்கு பிணையளித்தது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM