சீ.பி.எல். தொடரின் லூசியா ஸவுக்ஸ் மற்றும் நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்று அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய லூசியா ஸவுக்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது.

லூசியா ஸவுக்ஸ் அணி சார்பாக பிளெட்சர் 41 ஓட்டங்களையும், அணித்தலைவர் சமி  40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பீட்டன் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்ர்.

165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கினை அடைந்தது.

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் மெக்கலம் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

லூசியா ஸவுக்ஸ்ஜோன்சன் மற்றும் டெய்லர் ஆகியொர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக நைட் ரைடர்ஸ் அணியின் மெக்கலம் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை நைட் ரைடர்ஸ் அணி  அரையிறுதிப்போட்டியில் ஜமைக்கா டலவாஸ் அணியுடன்  மோதவுள்ளது.