புதிய ஆய்விற்கு அமைய நாட்டில் 2500க்கும் மேற்பட்டோருக்கு வாய் புற்று நோய் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வாய் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிகாட்டியுள்ளது.

குறிப்பாக அதிகமான ஆண்களே இந்நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டள்ளது.