ஐரோப்பிய ஒன்றியம் 35.75 மில்லியன் யூரோ (8.26 பில்லியன் ரூபா) மதிப்புள்ள இலங்கைக்கான மூன்று மானியங்களை வழங்கியுள்ளது.

இது இலங்கையின் நீதித் துறையை வலுப்படுத்த உதவுவதுடன், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த உதவும், மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கினை கொண்டுள்ளது.

இந்த மானியங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் ஷைபி, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். அட்டிகல்லேவுக்கு வழங்கினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் விரிவாக்கப்பட்ட தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் இலங்கையுடனான நல்லுறவு மற்றும் ஆதரவைப் பாராட்டிய திறைசேரியின் செயலாளர், இந்த மானியங்கள் நீதித்துறையையும், இலங்கையில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தும் என்றும் கூறினார்.