Published by T. Saranya on 2021-01-13 15:44:24
(எம்.நியூட்டன்)
வடமாகாண டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (13.01.2021) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

மாகாண டெங்கு உதவியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆளுநர் அலுவலகம் முன்பாக காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தங்களது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி மாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இந்த மகஜரின் பிரதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் அங்கஜன் ராமநாதன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மகேஷன் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
