இங்கிலாந்து தொடருக்கான 22 பேர் கொண்ட அணியில் மீண்டும் மெத்தியூஸ்

Published By: Vishnu

13 Jan, 2021 | 03:14 PM
image

இங்கிலாந்துக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 22 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூஸ் இடம்பிடித்துள்ளார்.

தொடை எலும்பு காயம் காரணமாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கையின் கடைசி டெஸ்ட் தொடரைத் தவறவிட்ட மெத்தியூஸ், நுவான் பிரதீப், ரூஷென் சில்வா மற்றும் லக்ஷன் சண்டகன் ஆகியோருடன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

திமுத் கருணாரத்ன தலைமையிலான இந்த அணியில் ஆட்டமிழக்காத ரமேஷ் மெண்டிஸும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அதேநேரம் தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜிதா, சந்தூஷ் குணதிலகே மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தென்னாபிரிக்காவுடனான தொடரில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு காலியில் ஆரம்பமாகவுள்ளது.

 

Srilanka Squad: Dimuth Karunaratne (Captain), Kusal Janith Perera, Dinesh Chandimal, Kusal Mendis, Angelo Mathews, Oshada Fernando, Niroshan Dickwella, Minod Bhanuka, Lahiru Thirimanne, Lasith Embuldeniya, Wanindu Hasaranga, Dilruwan Perera, Suranga Lakmal, Lahiru Kumara, Vishwa Fernando, Dushmantha Chameera, Dasun Shanaka, Asitha Fernando, Roshen Silva, Lakshan Sandakan, Nuwan Pradeep, Ramesh Mendis

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53
news-image

திருக்கோ T20 லீக் 2025 -...

2025-01-18 18:45:39