தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்து சரியாக ஏழு நாட்களுக்குப் பின்னர் இலங்கைக்கு எதிராக மற்றொரு சவாலான போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இலங்கை அணியானது நாளை இங்கிலாந்து அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை சந்திக்கவுள்ளது.

நாளைய போட்டியில் இலங்கை அணியானது ஆடுகளம் நுழைவதற்கு சற்று தயக்கம் காட்டுகின்றது என்று கூறினால் கூட அது மிகையாகாது.

காரணம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் தோல்வி மற்றும் உபாதை காரணமாக ஏழு முக்கிய வீரர்களின் இழப்பு என்பன இலங்கை அணியை இத் தருணத்தில் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

எனினும் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரான நிரோஷன் டிக்வெல்லா, போட்டிகளில் தங்கள் தவறுகளை சரிசெய்து ஒரு நல்ல தொடக்கத்தை மேற்கொண்டால், தனது அணிக்கு போட்டியை வெல்ல சிறந்த வாய்ப்பு உள்ளது என்று கூறியும் உள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடனான தொடரிலும் இலங்கை அணி வீரர்கள் இதே மனநிலையுடன் ஆடுகளம் நுழைந்தனர். எனினும் முன்னணி வீரர்களின் இழப்பு மற்றும் சூழ்நிலைகள் என்பன இலங்கையின் நம்பிக்கையை வேரோடு சாய்த்தது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாட்களிலேயே முடிவடைந்தன, இலங்கை நான்கு இன்னிங்ஸ்களில் ஒன்றில் 60 ஓவர்களுக்கு மேல் விளையாடியது. முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 96 ஓவர்களில் 396 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் இலங்கை மற்ற மூன்று இன்னிங்சில் (46.1 ஓவர்கள், முதல் இன்னிங்சில் 40.3 ஓவர்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 56.5 ஓவர்கள்) 143.3 ஓவர்களுக்காக வெளியேற்றப்பட்டது. 

இது இவ்வாறிருக்க முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஹம்பாந்தோட்டாவிலிருந்து காலிக்கு சென்றுள்ள இங்கிலாந்து அணியானது நேற்று முன்தினம் காலியில் தனது முதல் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஒரு வாரமாக சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிறிஸ் வோக்ஸ், இதன்போது பயிற்சிக்கு திரும்பினார். 

கடந்த 08 ஆம் திகதி மாலை தென்னாபிரிக்காவிலிருந்து காலிக்கு வந்த இலங்கை அணி 10 ஆம் திகதி ஒரு பயிற்சி அமர்வை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று முழுவதும் பெய்த பலத்த மழைக் காரணமாக பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அற்றுப் போனது.

இருப்பினும், இலங்கை அணி தனது பயிற்சி நடவடிக்கைகளில் நேற்றுமுன்த்னம் காலி சர்வதேச மைதானத்தில் மேற்கொண்டது.

இங்கிலாந்து அணியின் வலிமை மிக்க வீரர்களான பென் ஸ்டோக்ஸ் ஜோஃப்ரே ஆர்ச்சர் ரோரி பேர்ன்ஸ் ஆகியோரும் இத் தொடரில் உள்வாங்கப்படவில்லை. அதேநேரம் 2018 ஆம் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை 3-0 என்ற தொடர் வெற்றிக்கு அழைத்துச் சென்ற முக்கிய வீரர்களான அடில் ரஷித் மற்றும் மொய்ன் அலி ஆகியோரும் கொவிட் 19 ஆகியோர் வைரஸ் தொற்று காரணமாக அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் 2018 ஆம் ஆண்டு இலங்கை அணி அடைந்த தோல்விக்கு இத் தொடரின் மூலம் பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் தமக்கு உள்ளதாக இலங்கை அணி வீரர் நிரோஷன் டிக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நாளைய தினம் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்கத்கது.