தைப்பொங்கலை முன்னிட்டு பிரதமரின் தலைமையில் 100 ஆலயங்களுக்கு நிதி உதவி

Published By: J.G.Stephan

13 Jan, 2021 | 10:57 AM
image

பின்தங்கிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இந்து ஆலயங்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 10,000 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கும் நிகழ்வுறு நேற்று (2021.01.12) அலரி மாளிகையில் இடம்பெற்றது.



புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய இந்த காசோலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இக்காசோலைகளை ஆலயங்களுக்கு வழங்குவதனை அடையாளப்படுத்தும் வகையில் இன்றையதினம் கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளின் ஆலயங்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டதுடன், ஏனைய ஆலயங்களுக்கு காசோலை வழங்கும் நடவடிக்கை மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படும்.

இதற்கு முன்னர் நவராத்திரி தினத்தில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 ஆலயங்களுக்கு பிரதமரின் ஆலோசனைக்கமைய 50 ஆயிரம் ரூபாய் வீதம் காசோலைகள் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன்,  பிரதமரின் பெருந்தோட்டத் துறைக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47