ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பதில் அஜித் மானப்பெரும

By T Yuwaraj

13 Jan, 2021 | 05:55 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக பாராளுமன்றத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளவருமான அஜித் மானப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க,  நீதிமன்ற அவமதிப்பு தண்டனை காரணமாக அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடுவதால்,  அஜித்  பதிலீடு செய்யப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

அஜித் மானப்பெருமவை பதிலீடு செய்ய தமது கட்சி எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனவும், 1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம்  தானியக்க முறையில்,  அது குறித்த செயற்பாடுகள் இடம்பெறும் எனவும்  ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

 கடந்த 2020 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெரும 47,212 வாக்குகளைப் பெர்றுள்ளார். 

இந் நிலையில் குறித்த கட்சியின்  பட்டியலில் அவரே அடுத்த இடத்தில் உள்ள நிலையில், தெரிவு செய்யப்பட்ட ஒரு வேட்பாளர் பதவியை இழக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்த சில நாட்களில்  பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவரை பெயரிட்டு வர்த்தமானி வெளியிடுவது வழமையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை...

2022-12-02 16:44:44
news-image

கபூரியா மத்ரஸா விவகாரம் : 'வக்பு'...

2022-12-02 16:51:09
news-image

பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்களை உள்வாங்க நடவடிக்கை...

2022-12-02 16:18:11
news-image

ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில்...

2022-12-02 15:20:16
news-image

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2022-12-02 14:57:28
news-image

ஒதியமலை படுகொலையின் 38 ஆவது நினைவேந்தல்...

2022-12-02 15:21:09
news-image

பொல்பித்திகமவில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை !

2022-12-02 14:45:00
news-image

பன்னலயில் பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள்...

2022-12-02 14:33:00
news-image

15 வயதான மாணவி பாலியல் துஷ்பிரயோகம்...

2022-12-02 13:44:58
news-image

விபசார நடவடிக்கைக்காக ஓமானுக்கு இலங்கைப் பெண்கள்...

2022-12-02 13:39:28
news-image

பாராளுமன்றத்தில் தேவையற்ற பேச்சுக்களை பேசி நேரத்தை...

2022-12-02 14:51:46
news-image

10 மாதங்களில் 12,000 சமூக ஊடகங்கள்...

2022-12-02 13:28:32