( எம்.எப்.எம்.பஸீர்)

அனைத்து பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் ரத்கரவ்வே ஜினரத்தன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

ஆர்ப்பாட்டத்தின் இடையே, சட்ட விரோதமாக ஒலி பெருக்கியை பயன்படுத்தியமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கறுவாத்தோட்டம் பொலிஸார் கூறினர்.

கொழும்பு 7, கறுவாத்தோட்டம், விஜேராம வீதியில் உள்ள  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன்பாக இன்று  இலவச கல்விக்கான மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைத்து பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டாளர் ரத்கரவ்வே ஜினரத்தன தேரர்  சட்ட விரோதமாக ஒலிபெருக்கியை பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.