தொழிலாளர் நஷ்டஈட்டுத்தொகையை அதிகரிக்க தீர்மானம்

Published By: Gayathri

12 Jan, 2021 | 07:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும்போது வழங்கப்படும் நட்டஈட்டுத்தொகையை 12 இலட்சத்தில் இருந்து 25 இலட்சமாக அதிகரிக்க தொழிற்துறை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2003ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள 1971 ஆம் ஆண்டு 45 ஆம் இலக்க தொழிலாளர்களின் தொழில் முடிவுறுத்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும்போது சலுகை வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தொழிலாளர்களின் சேவை முடிவுறுத்தும்போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகை தீர்மானிப்பதற்கான சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய தொழில் உறவுகள் அமைச்சரால் கொண்டுவரப்பட்ட ஒழுங்குவிதிகளை அடிப்படையாகக்கொண்டு தொழிலாளர்கள் பணிபுரிந்த காலத்தை கருத்திற்கொண்டு நட்டஈடு தீர்மானிக்கப்படும். 

அவ்வாறாயினும் குறித்த சூத்திரத்துக்கமைய கணிப்பிடும்போது ரூபா 1,250,000 இற்கு அதிகரிக்கப்படாத ஏற்பாட்டுக்கு குறித்த ஒழுங்குவிதிகளில் உள்வாங்கப்பட்டிருப்பதால் நியாயமற்ற வகையில் தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படும்போதும், நிறுவனம் மூடப்படும் போதும், தொழிலை இழக்கும்போதும் உயர் சம்பளத்தை பெறும் பணியாளர்களுக்கு கிடைக்கும் நட்டஈடு குறைவாக இருக்கின்றமை தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தை கவனத்திற்கொண்டு செலுத்தப்படவேண்டிய உயர்ந்தபட்ச நட்டஈட்டுத் தொகையை ரூபா 1,250,000 இலிருந்து ரூபா 2,500,000 தொழிற்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஜரட்ட பல்கலையின் ஜப்பானிய மொழி ஆய்வகத்துக்கு...

2025-02-13 18:56:15
news-image

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள...

2025-02-13 18:49:17
news-image

கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையின் நவம்...

2025-02-13 18:36:35
news-image

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 50 மூடை உலர்ந்த...

2025-02-13 18:15:25
news-image

மியன்மார் சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து...

2025-02-13 17:45:45
news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப் போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு...

2025-02-13 17:46:58
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24