அவிசாவளை, தல்துவ கனுகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.வசந்த என்ற 23 வயதுடைய இளைஞன்  இன்று காலை (12ஆம் திகதி) வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அவிசாவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் இன்று காலை சீதாவக்கை கைத்தொழில் பேட்டைக்கு வேலைக்கு செல்வதற்காக காலை 6.30 மணியளவில் கனுகொல்ல வீதியில் இருந்து தல்துவ பிரதான வீதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பிரதான வீதியில் வேகமாக வந்த வேன், மோட்டார் சைக்கிளில் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் வேன் சாரதியை அவிசாவளை பொலிசார் கைதுசெய்து தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.