இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'மாஸ்டர்' படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியானது.

 

இதனைத் தொடர்ந்து இணையத்தில் கசிந்த 'மாஸ்டர்' பட காட்சிகளை பகிர வேண்டாம் என படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் ஜனவரி 13ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. 

தற்போது படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் பத்து வினாடிகள் கொண்ட காட்சிகளை வீடியோவை  வெளியிட்டு படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இணையத்தில் கசிந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், 'மாஸ்டரை உங்களிடம் சேர்ப்பிக்க ஒன்றரை வருடங்கள் உழைத்திருக்கிறோம்.

எல்லாம் நீங்கள் திரையரங்குகளில் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். ஏதோ சில காரணங்களால் இணையத்தில் கசிந்த மாஸ்டர் பட காட்சிகளை தயவுசெய்து சமூக வலைதளங்களின் மூலமாக பகிர வேண்டாம்.

அனைவருக்கும் நன்றி. 13ஆம் திகதியன்று மாஸ்டர் உங்களை சந்திக்க வருகிறார். அதன்பின் மாஸ்டர் உங்கள் சொத்து.' என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணையத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதனிடையே 'மாஸ்டர்' படத்தை தமிழகம் மற்றும் இந்தியாவைத் தவிர வேறு நாடுகளில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருவதாக திரையுலக வணிகர்கள் வருத்தமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.