தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகத்தில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளான நடிகை ஜீவிதா மற்றும் டாக்டர் ராஜசேகரின் இளைய மகளான சிவானி ராஜசேகர் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார்.

'இனிது இனிது' என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமான ஒளிப்பதிவாளர் கே. வி. குகன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'WWW' ( Who Where Why) இந்தப்படத்தில் 'இனிது இனிது' பட புகழ் அதித் அருண், நடிகை சிவானி ராஜசேகர், நடிகர் சதீஷ், ராஜ்குமார், நடிகர் சந்தீப் பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சைமன் கே கிங் கிங் இசை அமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி வரும் இந்தப் படத்தின் மூலம் மூத்த நடிகர் டாக்டர் ராஜசேகரின் இளைய மகளான சிவானி கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்றது. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.