ஓமானின் அல் அமரத்தில் உள்ள ஓமான் கிரிக்கெட் அகாடமி மைதானம் 1 ஐ டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு பயன்படுத்த ஐ.சி.சி ஒப்புதல் அளித்துள்ளது.

பெப்ரவரியில் சிம்பாப்வேக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் சுற்றுப் பயணத்துக்கு முன்னதாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதேநேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டுக்கான தனது உள்ளூர் மைதானமாக ஓமானை நிரந்தரமாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஸ்கட்டிற்கு வெளியே உள்ள அல்-அமரத் வளாகம் ஏற்கனவே பல சர்வதேச தொடர்களை - ஒருநாள் மற்றும் டி 20 ஐ நடத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் திட்டமிடப்பட்ட சிம்பாப்வேக்கான தொடர் முன்னேறினால், ஓமான் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்துவதுடன் ஐந்தாவது ஐ.சி.சி இணை உறுப்பினராக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.