ஜப்பானில் தொடரும் கடுமையான பனிப்பொழிவின் விளைவாக  உயிரிழந்தவர்ளின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக டோக்கியோவின் என்.எச்.கே செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நைகாட்டா நகரில் நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 148 பேர் காயமடைந்ததாக என்.எச்.கே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. 

அதேநேரம் ஃபுகுய் ப்ரிபெக்சரில், 64 பேர் காயமடைந்துள்ளனர்.

டொயாமா ப்ரிபெக்சரில் 35 ஆண்டுகளில் முதல் முறையாக 100 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 91 பேர் காயமடைந்தனர்.

இஷிகாவாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 38 பேர் காயமடைந்தனர். மேலும் இரண்டு பேர் கிஃபுவில் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் கடந்த வாரம் பலத்த பனிப்பொழிவு ஏற்பட்டது. பல்வேறு பிராந்தியங்களில் பெரும் போக்குவரத்து இடையூறுகள் பதிவாகியுள்ளன மற்றும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. விநியோக வழிகள் மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.