முகக் கவசம் அணியத் தவறியமை மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்தில் ஜனவரி 05 ஆம் திகதி நேற்று வரையான காலப் பகுதியில் மொத்தம் 2,334 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 1,313 நபர்களிடம் விரைவான் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 19 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டது. மேலும் 1,021 பேர் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த இரு பரிசோதனைகளின் மூலமும் இதுவரை மொத்தம் 46 கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தல் நடமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கிடையில் குறித்த குற்றச்சாட்டுக்காக மேல் மாகாணத்திற்கு வெளியே 23 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில்  மேல் மாகாணத்துக்கு வெளியே 2,438 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.