நாட்டில் நேற்றைய தினம் 569 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

Published By: Vishnu

12 Jan, 2021 | 08:46 AM
image

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் மொத்தமாக 569 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில்  564 பேர் பேலியகொட - மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

ஏனைய நால்வர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் ஒருவர் வெளிநாட்டிலிலிருந்து வருகை தந்தவரும் ஆவார்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 48,949 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு ‍தெரிவித்துள்ளது.

இதேவேளை பேலியகொட - மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 45,186 ஆக பதிவாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 766 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 42,091 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,618 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 625 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் எட்டு நோயாளர்கள் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.

அதனால் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் நாட்டில் 240 ஆக உயர்வடைந்துள்ளது.

 

2021. ஜனவரி 06 ஆம் திகதி

01. வெலிகட சிறைச்சாலை கைதியான 52 வயதான ஆண் ஒருவர். வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஜனவரி 06ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஜனவரி 07 ஆம் திகதி

02. ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2021 ஜனவரி 07ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் கடும் நீரிழிவு நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2021 ஜனவரி 08 ஆம் திகதி

03. மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2021 ஜனவரி 08ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2021 ஜனவரி 08ஆம் திகதி மரணமானானர். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் காக்காய் வலிப்பு நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2021 ஜனவரி 10 ஆம் திகதி

05. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான ஆண் ஒருவர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் ,அந்த வைத்தியசாலையில் 2021 ஜனவரி 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர். களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் ,அந்த வைத்தியசாலையில் 2021 ஜனவரி 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா மற்றும் கடும் சிறுநீரக நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07. களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர். களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ,தேசிய தொற்று நோயியல் பிரிவிற்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2021 ஜனவரி 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 மற்றும் இரத்தம் நஞ்சானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2021 ஜனவரி 11 ஆம் திகதி

08. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் ,அந்த வைத்தியசாலையில் 2021 ஜனவரி 11ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியாவுடன் இரத்தம் நஞ்சானமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22