வடக்கிற்கும் தெற்கிற்கும் இருவேறுபட்ட சட்டங்கள் என்பது  சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது - காவிந்த

Published By: Digital Desk 4

12 Jan, 2021 | 09:05 AM
image

(இராஜதுரை ஹஷான்)

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழ் உறவுகள் நினைவுகூர்வது தேசதுரோக குற்றமல்ல. இவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இருவேறுப்பட்ட சட்டங்களை செயற்படுத்துவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது. 

Articles Tagged Under: காவிந்த ஜயவர்த்தன | Virakesari.lk

 

தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணித்து அரசாங்கம் இனப்பாகுப்பாட்டை பலப்படுத்த முயற்சிக்கிறது. யாழ்.பல்கலைக்கழகத்தில்  அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிட தூபி இடித்தழிக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கழைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி அழிக்கப்பட்டமை குறித்து கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கம் இனவாத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையினால் தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றது.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது அங்கு உரிமை போராட்டம் தலைத்தூக்குவது இயல்பான விடயமாகும். சர்வதேச நாடுகளிலும் உரிமை போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டே ஆரம்ப காலத்தில் போராட்டங்கள் எழுநது பிற்பட்ட காலத்தில் அவை போராட்ட இயக்கங்களாக மாற்றமடைந்தன. விடுதலை புலிகள் அமைப்பும் இவ்வாறான பின்னணியையே கொண்டுள்ளது.

தமிழிழ விடுதலை புலிகள் அமைப்பினால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு 1976ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கங்கள் பொறுப்பு கூற வேண்டும்.

2009 ஆம் ஆண்டு  யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு தேசிய நல்லிணக்கம் அனைத்து இன மக்கள் மத்தியிலும் செயற்படுத்தப்பட்டது. 2014 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில். இருந்த அரசாங்கம் இனவாதத்தை ஆயுதமாக கொண்டு செயற்படவில்லை.

அனைத்து இன மக்களின் ஆதரவுடன் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்திவ் ஒரு சில குறைப்பாடுகள் காணப்பட்டாலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பலப்படுத்தப்பட்டிருந்தது.

அக்காலப்பகுதியில் ஏற்பட்ட இனகலவரங்களுக்கு பின்னணியில் அரசியல்வாதிகளின் நோக்கங்கள் காணப்பட்டன. இனகலவரத்தை ஒரு தரப்பினர் தங்களின் அரசியல் எதிர்காலத்துக்கு பயன்படுத்தி பயனடைந்துக் கொண்டார்கள்.

தனி சிங்கள மக்களின் வாக்குகளினால் மாத்திரம் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. என்று குறிப்பிடுவது தவறாகும்.தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைக்கும் அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டும். ஆட்சிக்கு வந்த பின்னர் தேர்தல் காலத்தில் ஒரு இனம் மாத்திரம் தான் வாக்களித்தது என்று குறிப்பிடப்படும் போது இனங்களுக்கிடையில் முரண்பாடு மீண்டும் தோற்றம் பெறும் தற்போது இந்நிலைமையே காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது.இனக்கலவரங்களில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவினர்கள் நினைவுகூர்வது ஒன்றும் தேசதுரோக செயற்பாடல்ல.

தெற்கில் உள்ள பல்கலைகழங்களில் ஜே.வி.பி. யின் உருவசிலைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயத்தில் வடக்கிற்கும், தெற்கிற்கும்  இரு வேறுப்பட்ட தன்மையினை கையாளுவது சட்டவாட்சி கோட்பாட்டுக்கு முரணானது.

ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செயற்பட வேண்டும்.தமிழ்- முஸ்லிம் மக்கள் தற்போது பல விடயங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பாரிய முரண்பாடுளகள் தோற்றம் பெறும்.தேசிய நல்லிணக்கத்i கட்டியெழுப்க எதிர்கட்சி என்ற அடிப்படையில் பொறுப்புடன் செயற்படுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59