(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. எனினும் தொற்றாளர்களை விட தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை 487 பேர் குணமடைந்துள்ளனர். 

இதேவேளை இன்று மாலை 9 மணி வரை 568 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பேலியகொட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை 44 903 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,948 ஆகும்.

நோய்த் தொற்றுக்கு உள்ளான 6342 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்த் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 091 ஆகும். இதுவரை நாட்டில் 232 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஞாயிறன்று பதிவான மரணங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதியான 62 வயதான ஆண் ஒருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் கடந்த 08 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் மஹரகம  வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் நேற்று 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் புற்றுநோய் நிலை மற்றும் கொவிட் நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் கடந்த 09 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவி; நிமோனியா மற்றும் இருதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.