பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்று தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தேசிய பேஷன் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வரும் அமித் சவுகான் பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்று இவர் முதலாமாண்டு படிக்கும் போதில் இருந்து கூறிவருகிறார்.

அதே கல்லூரியைச் சேர்ந்த மேலும் 6 பேர் இவருடன் இணைந்து “நாத் உதரை” என்ற பெயரில் பாலியல் தொழில் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொழிலாளர்களை வைத்து குறும்படமும் எடுத்துள்ளனர்.

மேலும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்கை, போராட்டங்கள், கனவுகள், எதிர்கால நம்பிக்கைகள், பாலியல் தொழில் ஆகியவைகளின் இவர்களது கருத்துகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர்.

2014ஆம் ஆண்டில் பாலியல் தொழிலை சட்டமாக்க தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறியிருந்ததை அமித் சவுகான் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலியல் தொழில் சட்டமாக்கப்படும்போது சட்டத்திற்கு விரோதமான பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளார். பாலியல் தொழில் சட்டமாக்கப்படுவதால், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, அவர்களது வேலை நேரம் குறையும், ஆரோக்கியம், உடல்நிலை பாரமரிப்பு, ஊதியம் போன்றவை சிறப்பாய் அமையும்.