(நா.தனுஜா)

உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருவதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கிறார். 

அவ்வாறெனில், எதிர்வரும் மே மாதம் எவ்வித அடக்குமுறைகளோ சட்டரீதியான தடைகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது:

நினைவுத்தூபியின் ஊடாக அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருதல் என்ற போர்வையில் பயங்கரவாதிகளே நினைவுகூரப்படுகின்றனர் என்பதற்கான ஆதாரம் என்ன? அதேபோன்று போரின்போது உயிரிழந்தவர்களைத் தமிழர்கள் நினைவுகூருவதில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென்றால், கடந்த 2020 மே மாதம் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூருவது ஏன் தடைசெய்யப்பட்டது?

இவையனைத்திற்கும் மேலாக சரத் வீரசேகரவின் டுவிட்டர் பதிவின்படி, எதிர்வரும் மேமாதம் எவ்வித அடக்குமுறைகளோ, சட்டரீதியான தடைகளோ, இடையூறுகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.