இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி மற்றும் பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்திருந்தார். கர்ப்பமாக இருப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை அனுஷ்மா சர்மா தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அவ்வவ்போது பதிவிட்டு வந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் படங்களும் டுவிட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டது.

இந்நிலையில், அனுஷ்கா சர்மாவுக்கு இன்று (11.01.2021) அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை, விராட் கோலி ட்விட்டரில் அறிவித்துள்ளார். அனுஷ்கா சர்மாவும், குழந்தையும் நலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.