வவுனியா நகரில் இன்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வர்த்தகர்கள் தமது வர்த்தக நியைங்களை மூடி பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர் . 

வவுனியாவில் இன்றுகாலை முதல் கடும்மழை பெய்து வருகின்றது. இதனையும் பொருட்படுத்தாமல் சுகாதார அதிகாரிகளினால் நேற்று விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றுகாலை நகரில் பல்வேறு பகுதிகளி பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது . 

இதில் பழைய பேரூந்து நிலைய வர்த்தகர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளனர் .

இதேவேளை இன்றைய கடையடைப்பு முடக்கம் காரணமாக நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரச திணைக்களங்களில் ஊழியர்கள் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்பட்டுள்ளது. இன்றைய வடகிழக்கு கடையடைப்பு காரணமாக அரச திணைக்களங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிசோடி காணப்படுகின்றது .