வீதியை கடக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

By T Yuwaraj

11 Jan, 2021 | 05:18 PM
image

தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் 96 ஆம்  கட்டைப்பகுதியில் இவ்விபத்துச் சம்பவம் இன்று(11) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முள்ளிப்பொத்தானை 94 கட்டைப்பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணொருவரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 குருணாகல் பகுதியிலிருந்து திருகோணமலைக்கு நிலக்கரி வகைகளை ஏற்றுவதற்காக சென்ற டிப்பர் வாகனமே இவ்வாறு வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்து தடுத்து வைத்துள்ளதோடு விபத்துக்குள்ளான டிப்பர் வாகனமும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான பெண்  கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருவதோடு  மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுமானத் துறையில் ஒரு தேசியக் கொள்கை...

2022-11-30 10:06:51
news-image

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம்...

2022-11-30 10:20:13
news-image

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி நடத்தவேண்டும்...

2022-11-30 09:02:29
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-30 08:45:56
news-image

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும்!

2022-11-30 08:50:50
news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19
news-image

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில்...

2022-11-29 22:16:06
news-image

மருந்து உற்பத்தி வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தினால்...

2022-11-29 16:06:19