என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்

By T. Saranya

11 Jan, 2021 | 03:24 PM
image

அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று, டிசம்பர் இறுதியில் திடீரென அறிவித்தார். டிசம்பர் 3 ஆம் திகதி அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி திடீரென இந்த முடிவை அறிவித்தார்.

இந்நிலையில், ரசிகர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் ரஜினி நேரடியாக இந்த போராட்டம் பற்றி ரசிகர்களுக்கு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. பதிலும் சொல்லவில்லை.

ஆனால் இன்று (11.01.2021) காலை ரஜினி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right