வவுனியா மாவட்டத்தில் கடும் மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published By: Gayathri

11 Jan, 2021 | 05:14 PM
image

வவுனியா மாவட்டத்தில் இன்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளிற்குள் வெள்ள நீர் தேங்கியுள்ளமையால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வவனியா நகர்ப்பகுதியில் இன்று காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணி வரையான மூன்று மணி நேர காலப்பகுதியில் 54 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதானம் நிலையம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், வவுனியா நகர்ப்பகுதிகளில் வீதிகள் எங்கும் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பூந்தோட்டம் மற்றும் சிறிநகர், கருப்பணிச்சாங்குளம் பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளிற்குள் உட்புகுந்துள்ளது. 

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பை சந்தித்துள்ளது. வயல் நிலங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளமையால் நெற்பயிர்ச்செய்கையும் அழிவை சந்தித்துள்ளது.

இதேவேளை, இன்றுகாலை 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஓமந்தையில் 85 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வவுனியாவில் 31.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், செட்டிகுளத்தில் 28 மில்லிமீற்றர், நெடுங்கேணி 37 மில்லிமீற்றர், மழைவீழ்ச்சியும், உலுக்குளத்தில் 50.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38