யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு கண்டத்தை வெளியிடும் வகையில் இன்று வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன.

அந்தவகையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த ஹரத்தாலுக்கு முஸ்லிம் சமூகத்தினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினாலும் பல்கலைக்கழக மாணவர்களினாலும்  நினைவுக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி 

திருகோணமலை

மன்னார்

மட்டக்களப்பு

வவுனியா


 முல்லைத்தீவு