பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் 13 அதிகாரிகள் உட்பட 17 நபர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.