டைப் 2 நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொழுப்பு.!

Published By: Robert

05 Aug, 2016 | 11:10 AM
image

இன்று நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலும் டைப் 2 டயாபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். இவர்கள் இதனை கட்டுப்படுத்த ஆயுள் முழுவதும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளை சாப்பிட்டு வருவதுடன், உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்கவேண்டும்.

இந்நிலையில் இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மெட்போர்ட் பல்கலைகழகம் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள்.

டைப் 2 நீரிழிவைக் கட்டுப்படுத்த செறிவூட்டப்படாத கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகளவில் சாப்பிட்டு வரவேண்டும். இப்படி செய்து வரும் போது இவை டைப் 2 நீரிழிவிற்கான இன்சுலீன் சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது என்றும், அதனையடுத்து டைப் 2 நீரிழிவை கட்டுக்குள் வைக்க இயலும் என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். அதேசமயத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கவேண்டும் என்பதையும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

4500க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் செறிவூட்டப்படாத கொழுப்பு (unsaturated fats) சத்துள்ள உணவினை தொடர்ந்து சாப்பிட்டவர்கள். டைப் 2 நீரிழிவின் பாதிப்பின் அளவு வெகுவாக குறைந்திருந்ததை கண்டறிந்திருக்கிறார்கள்.

பாதாம், வெண்ணெய், வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை வெண்ணெய், அக்ரூட் பருப்பு, மத்தி எனப்படும் மீன், மெகடாமியா கொட்டைகள், சால்மன் எனப்படும் ஒரு வகையான நன்னீர் மீன் ஆகிய இவைகள் எல்லாம் செறிவூட்டப்படாத கொழுப்புகள் என்பதை நாங்கள் சொல்லாமலேயே நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இருந்தாலும் ஒரு முறை நினைவு படுத்துவது நல்லது தானே.

இவைபோன்ற நல்ல கொழுப்பு சத்துள்ள உணவை மருத்துவர்களின் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலுடன் சாப்பிட்டால் டைப் 2 சர்க்கரை வியாதியிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

டொக்டர் ஏ சந்திரமோகன், M.D.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36