பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவர் இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந் நிலையில் சி.சி.டி.வி. காணொளிக் கட்சிகளை அடிப்படையாக கொண்டு அவருடன் தொடர்புகளை பேணிய நபர்களை அடையாளம் காண நடவடிக்க‍ை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நிலைமை காரணமாக பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எந்த தடையும் இல்லை, வழக்கம் போல் கடமைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.