முகக் கவசம் அணியத் தவிறியமை மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேல் மாகாணத்திற்கு வெளியே 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்காக மொத்தம் 2,415 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை மீறும் நபர்களை கைதுசெய்வதற்கான சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.