ஆஸி அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் தனது முதலாவது டெஸ்ட் ஹெட்ரிக்கை இன்று காலி சர்வதேச மைதானத்தில் பதிவு செய்துள்ளார்.

இலங்கை அணியின் நுவான் சொய்சாவிற்கு பிறகு டெஸ்ட் போட்டியொன்றில் ஹெட்ரிக் பதிவு செய்த வீரராக ஹேரத் பதிவாகியுள்ளார்.

இதேவேளை இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் டெஸ்ட் போட்டியில் பெற்ற முதல் ஹெட்ரிக்காக இந்த ஹெட்ரிக் பதிவாகியுள்ளது.